Tuesday, October 7, 2008

ஏன் இப்படி...?

எத்தனையோ முறை நாள்தோறும் பேப்பரிலும், புத்தகங்களிலும் ஏதேனும் ஒரு கருத்துக்கணிப்பு, பேட்டி புகைப்படத்துடன் வெளியாகிறது. டீவியில், நடந்து செல்லும் யாரோ ஒருவரை நிறுத்தி இதை பற்றி என்ன நினைகின்றீர்கள், அது சரியா? இதை பற்றி அவர் சொன்னது சரியா என்றெல்லாம் கேட்கின்றார்கள்...

நானும் மெட்ராஸில்தான் இருக்கின்றேன், தினந்தோறும் வெளியில் வருகின்றேன்... சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன், கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு என்று எல்லா இடங்களிலும் சுற்றி திரிகின்றேன் ஆனால் ஒரு நாள் கூட, ஒரே ஒரு முறை கூட யாருமே நிறுத்தி கேட்டதில்லை ஏன்? எனக்கு தெரிந்தவர்களை கூட கேட்டதில்லை ஏன்? இவர்கள் எதன் அடிப்படையில் பேட்டிகாண சக மனிதர்களை தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை, உங்களுக்கு தெரியுமா?

**********************************************************************************
இன்னமும் ஒரு உதவி...

காலம் காலமாக கேட்கப்பட்டு வரும் கேள்விதான்... அன்பு முழுவதையும் கொட்டினாலும் ஏன் பெண்களுக்கு நம் அன்பின் மீது கூட சந்தேகம் வருகிறது... அன்பு செலுத்த ஏதேனும் விதி முறைகள் உள்ளதா? இல்லை அவர்களின் பார்வையில் அன்பு என்பதன் வடிவம் எது...

ஒரு மனிதன் தன் சக உயிரின் மீது காட்டும் அன்பின் எல்லை ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றாலும், இவர்கள் மட்டும் எல்லையின் அளவை விரிவாகி கொண்டே போவது ஏன்... அன்பு என்பது எல்லை இல்லாததுதான் என்றாலும் அன்பு செய்யும் மனதின் எல்லைகளையே இவர்கள் சந்தேகப்படுவதுதான் பிரச்சனையின் மூல காரணம் என்று எண்ணுகிறேன்... விளக்கம் ப்ளீஸ்...

********************************************************************************
திரிபு...
இங்குள்ளவர்களின்
நட்பு சிலாகிப்பு
பால் மாறுபாடெனில்
திரிந்துபோய்விடுகிறது

1 comment:

Unknown said...

இது அன்பை கொட்டுவதால் வரும் இடர்பாடு. அன்பு செலுத்தப்படவேண்டியது, கொட்டப்படவேண்டியது அல்ல!.

அவளது பயணத்தின் தொடக்கம் சுயஅச்சம், வரும் வழி வேண்டுமானால் சந்தேகம் ஆக இருக்கலாம். கொட்டப்படுவது சட்டென நின்று விடுமோ என்ற எண்ண தாக்கத்தில் இருந்து பிறப்பது அது.

அன்பு செலுத்த பாரபட்சம் இல்லை, ஆனால் அளவு அறிய வேண்டும். பிணியின் வீரியம் பொறுத்தே மருந்து!.

அவர்களின் பார்வையில் அன்பு என்பது "தனக்கே தனக்கு" என்பதுதான்.

எல்லையை விரிவாக்குவது..தனது " தனக்கே தனக்கு" என்ணத்தை நிலை நாட்டத்தான், அது தான் பிரச்சினையின் மூல காரணமும் கூட.

அன்பு ஆக்ரமிப்பில் உயிர் வாழ்வதில்லை என்பது பல பெண்மைக்கு தெரியவதே இல்லை.