Wednesday, October 8, 2008

பெண்கள்...

பெண்கள் என்பவர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை யாராலும் சொல்ல முடிவதில்லை... அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலவீனம் (அவர்கள் அதை பலம் என்று நினைத்து வாழ்கிறார்கள் என்பது மற்றொரு நகைப்பு...) அவர்களுக்கு மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்று இரண்டு வகை உண்டு என்பதை அறியாதது... அவர்கள் இரண்டு வகை மனிதர்களுக்கும் ஒரே அளவுகோலை வைத்தே அலைகிறார்கள் என்பது மிகப்பெரிய சோகம்... அதை விட மிகப்பெரிய வருத்தம் அவர்கள் தங்களுக்கு இந்த பலவீனம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது, அப்படியே உணர்ந்தாலும் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்பது இன்னொரு சோகம்..

அதெப்படி இவர்களால் உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும், முறித்து கொள்ளவும் இவ்வளவு எளிதாக முடிகின்றது என்பது இன்னொரு மிகபெரிய ஆச்சரியம்...(அல்லது முறித்துக்கொண்டது போல் நடிக்கவாவது முடிகின்றது). இவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆழமான மனது, அதில் ஏன் இவ்வளவு அழுத்தமான, கடினமான கதவுகள்?

பெண்கள் பொதுவாக உணர்ச்சிவயப்பட்டவர்கள், அவர்கள் சட்டென்று இளகி விடுவார்கள், ஏதேனும் ஒரு விஷயம் என்றால் உருகி விடுவார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள்... எல்லாமே சரிதான் ஆனால் இவர்கள் இதையெல்லாம் செய்வது அவர்கள் நல்லவன் என்று நினைத்து இருக்கும் ஆண்களிடம் தான்... வேடிக்கை என்னவென்றால் அவர்கள் அப்படி நல்லவன் என்று முடிவு செய்ததே தவறான முடிவாக இருக்கும். இவர்களிடம் இருக்கும் மற்றொரு விஷயம், ஓரிடத்தில் தவறு செய்து அதனால் ஏற்பட்ட காயம், வலி காரணமாக அதன் பின்பு கிடைக்கும் உண்மையான அன்பிற்கும் சந்தேகத்தை தான் பரிசாகவும், அலட்சியத்தை தான் அன்பளிப்பாகவும் கொடுப்பார்கள்...

யோசித்து பார்த்தால் நமக்கெல்லாம் அன்பு என்ற ஒன்றை முதன் முதலில் காட்டியதே, அது எவ்வளவு உயர்ந்தது, உன்னதமானது என்பதையெல்லாம் உணர்த்தியது நம் அம்மாதான்...ஒரு பெண் தான்... எனினும் நம் வாழ்க்கையில் நாம் தினந்தோறும் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கி தவித்து ஆறுதலாக ஒரு வார்த்தை எதிர்பார்க்கும் ஒரே இடம் பெண்கள் என்னும் போதும், அதை அவர்கள் நன்றாக அறிந்திருந்த போதும், நமக்கு ஏமாற்றமே கிடைக்கின்றது எனில் இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை...

எனினும் என் போன்றவர்களுக்கு வாழ்க்கை என்பது...Emily Dickenson சொன்னது போல்...

IF I can stop one heart from breaking,
I shall not live in vain;
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting Robin
Unto his nest again,
I shall not live in vain.

ஒரே ஒரு இதயம் முறிவதை தடுக்க முடிந்தால், ஒரு வலியை, வேதனையை குறைக்க முடிந்தால், கூட்டில் இருந்து தவறி விழுந்த குருவியை மீண்டும் அதன் கூட்டுக்கு திருப்பி அனுப்ப முடிந்தால் நான் வாழ்ந்தது வீண் அல்ல...

1 comment:

Madhu said...

பெண்களின் பலமும் பலவீனமும் அன்பு காட்டுவதும் அன்புக்காக ஏங்குவதும் தான். அறிவியல் பூர்வமாக ஆணைவிட பெண் பலவீனமானவள் என்று ஒப்புகொள்ளும் நீங்கள், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவளை சுமக்க சொல்லும் சுமைகள் அதிகம். அந்த சுமைகளை சுமக்க அவள் கூலியாக எதிர்பார்பது அன்பை மட்டும் தான்.

பிறந்த வீட்டின் அன்பை ஒரே நாளில் முறித்துகொண்டு முன்பின் தெரியாதா ஒருவன் பின் நடக்கும் பெண்ணுக்கு நீங்கள் சொன்னதுபோல் அன்பை முரிதுகொண்டதுபோல் நடிப்பது கடினமாக இருக்காது ஆனால் பெண்ணின் வேவேவரு பரிமாணங்களிலும் அவள் வாழ்க்கை அன்பை மட்டுமே அடிபடையாக கொண்டது என்று யாரும் புரிந்துகொள்வது இல்லை.

பெண்ணுக்கு அன்பு என்று ஒன்று கிடைத்தால் இளகி விடுவாள், அதை பயன்படுத்தி அவளை ஏமாற்றும் கூடமே அதிகம். காயம் பட்டவள், அவள் வாழ்கையின் ஆதாரமாக கிடைக்கும் அன்பை தனுக்கு மட்டுமே என்று தக்கவைத்துக்கொள்ள நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது? கிடைத்த அன்பு அவள் சாகும்வரை நிலைக்க ஆசைபடுவது தவறா? இதன் பெயர் எப்படி சந்தேகம் ஆகும்? "நிலைத்த அன்பை" பெற நினைக்கும் பெண்ணுக்கு தெரியாதா ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று? "நிலைத்த அன்பை" தனக்கு மட்டுமே சொந்தம் என்று நினைப்பது சந்தேகம் எல்லை அது பெண்களுகே உள்ள குணம். அப்படி அன்பை செலுத்துபவன் கண்டிப்பாக நல்லவனாகத்தான் இருக்க முடியும்.